மைத்ரியின் நகர்வைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை: JVP - sonakar.com

Post Top Ad

Friday, 14 December 2018

மைத்ரியின் நகர்வைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை: JVP


மைத்ரிபால சிறிசேன, தொடர்ந்தும் எதோச்சாதிகாரமாக நடந்து கொண்டால் அவருக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்று கொண்டுவரப்படுவதைத் தவிர்க்க முடியாது என தெரிவிக்கிறது ஜே.வி.பி.


அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய மைத்ரிபால அதனை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில் தற்போது அவரால் உருவாக்கப்பட்ட அரசியல் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி ரணில் விக்கிரமசிங்க பிரதமராவதை ஆதரிக்கவில்லையாயினும் ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியை முறியடிப்பதில் முன்னின்று பணியாற்றியிருந்தது. இந்நிலையிலேயே தற்போது மைத்ரிபால சிறிசேன அவதானிக்கப்படுவதாகவும் அவருக்கு எதிரான குற்றப்பிரேரணைக்குத் தயாராக இருப்பதாகவும் அக்கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment