117-0, 7-0, 3-0 'தொடர் தோல்வி': மைத்ரியின் அடுத்த நகர்வு என்ன? - sonakar.com

Post Top Ad

Friday, 14 December 2018

117-0, 7-0, 3-0 'தொடர் தோல்வி': மைத்ரியின் அடுத்த நகர்வு என்ன?கடந்த ஒக்டோபர் 26ம் திகதி தனிப்பட்ட பழிவாங்கலுக்காக ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்சவினால் நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறமுடியாது போன நிலையில் நாடாளுமன்றையும் கலைக்க உத்தரவிட்டு நாட்டு மக்களின் கோபத்துக்குள்ளாகியுள்ள ஜனாதிபதி மிகவும் இக்கட்டான சூழலில் மீண்டும் ரணிலை பிரதமராக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக 122-0, ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117-0, உச்ச நீதிமன்றில் நாடாளுமன்றுக்கு எதிரான வழக்கில் 7-0, மஹிந்த மீதான தடை நீக்கத்தில் 3-0 என தொடர் தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் மைத்ரிபால சிறிசேன ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து தூர விலக்கித் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.இந்நிலையில், மஹிந்த தரப்பின் தற்காலிக நட்பு மைத்ரிக்கு நீண்ட காலத்துக்குக் கை கொடுக்குமா? என்பதும் சந்தேகத்துக்குரியதாகும். மஹிந்த ராஜபக்ச அரசியலை விட்டு ஒதுங்கினாலேயன்றி மைத்ரியின் தலைமையில் கீழ் மஹிந்த அணி இயங்குவது சாத்தியமற்றதொன்றாகியுள்ளது.

தற்சமயம் தமது புதிய நண்பர்களை நம்பியே அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்கின்ற போதிலும் ரணிலுடன் இணங்கிப் பணியாற்றக்கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை விரைவில் இழக்கும் நிலையில் விரக்தி நிலையே மைத்ரிக்கு எஞ்சப்போகிறது.

ஞாயிற்றுக் கிழமை ரணில் மீண்டும் பிரதமராக நியமிக்கப்படப் போவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அன்றைய நாள் மைத்ரியின் அரசியல் வாழ்க்கைக்கும் முக்கிய நாளாக இருக்கும் என அவதானிகள் கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment