JVPயுடன் கூட்டணி சேர 'யோசிக்கும்' மனோ! - sonakar.com

Post Top Ad

Tuesday 11 December 2018

JVPயுடன் கூட்டணி சேர 'யோசிக்கும்' மனோ!


ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் நிற்கும் சம்பிரதாயத்தை உடைத்து எதிர்வரும் காலத்தில் ஜே.வி.பியுடன் கூட்டணி சேர்ந்தால் என்னவென தான் யோசிப்பதாக தெரிவிக்கிறார் மனோ கணேசன்.



அரசியல் சர்ச்சைகளின் போதும் தேர்தல் காலங்களிலும் ஜே.வி.பியினரின் பேச்சுக்கள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. எனினும், தேர்தல் முடிவுகளில் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமலேயே அக்கட்சி தொடர்ந்தும் போராடி வருகிறது.

எனினும், பரந்த மட்டத்தில் ஜே.வி.பியின் கருத்துக்கள் ஜனநாயகத்துக்கு வலுச் சேர்த்து வருகின்ற நிலையில் மனோ இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment