சஜித் கொண்டுவரப் போகும் பிரேரணை: 117 பேரின் ஆதரவை எதிர்பார்க்கும் UNP - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 December 2018

சஜித் கொண்டுவரப் போகும் பிரேரணை: 117 பேரின் ஆதரவை எதிர்பார்க்கும் UNP


நாளைய தினம் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் 117 பேர் ஆதரவாக வாக்களிப்பர் என ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


நாளைய நிகழ்ச்சி நிரலில் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இணைக்கப்பட்டுள்ள நிலையில் சஜித் பிரேமதாச, பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளார்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கத் தகுதியானவரா என்பதை விளக்கக் கோரி உச்ச நீதிமன்றில் இன்று பெண்கள் அமைப்பொன்று சார்பாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment