கட்டார் GCCல் சேர்ந்தியங்க அதே நிபந்தனை தான்: சவுதி - sonakar.com

Post Top Ad

Sunday, 9 December 2018

கட்டார் GCCல் சேர்ந்தியங்க அதே நிபந்தனை தான்: சவுதி


வளைகுடா நாடுகளுக்கிடையிலான கூட்டுறவுக்கான அமைப்பில் வழமை போன்று சேர்ந்தியங்க என்ன செய்ய வேண்டும் என்பது கட்டாருக்கு நன்கே தெரியும் என தெரிவித்துள்ளது சவுதி அரேபியா.


இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர், கட்டார் சகோதரர்களுக்கு ஏனைய நாடுகளுடனான கூட்டுறவுக்குத் தடையாக இருப்பது எதுவெனத் தெரியும் எனவும் அவற்றை நிறைவேற்றினால் பகை மறந்து இணைந்து செயலாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இஹ்வான்களுடனான தொடர்பு மற்றும் ஈரான் சார்பு நிலைப்பாட்டை கட்டார் மாற்றிக்கொள்ள வேண்டும் எனும் நிபந்தனையில் சவுதி, அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கட்டாருடனான ராஜதந்திர உறவுகளைத் துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment