முஸ்லிம்களை வெளியேறச் சொன்ன நேதன்யாஹுவின் மகனுக்கு FBல் தடை - sonakar.com

Post Top Ad

Monday, 17 December 2018

முஸ்லிம்களை வெளியேறச் சொன்ன நேதன்யாஹுவின் மகனுக்கு FBல் தடைமுஸ்லிம்கள் அனைவரும் இஸ்ரேலை விட்டு வெளியேறுவதே தனது விருப்பம் என கருத்து வெளியிட்டு, தடை செய்யப்பட்டிருந்த விடயங்களையும் இணைத்த இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாஹுவின் மகன் யய்ர் நெதன்யாஹுவை தடை செய்துள்ளது முகநூல் நிர்வாகம்.பலஸ்தீனர்களின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்ததாகக் கருதப்படும் இரு இஸ்ரேலிய சிப்பாய்களின் படங்களை இணைத்து, இதற்கு பழிவாங்க வேண்டும் எனவும் முஸ்லிம்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு 27 வயது நிரம்பியுள்ளமையும் தந்தையை விட பல மடங்கு ஆக்கிரமிப்பு சிந்தனையை வெளிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment