3 பேர் தான் அரசில் இணைவார்கள்: நாங்கள் எதிர்க்கட்சி: தயாசிறி! - sonakar.com

Post Top Ad

Monday, 17 December 2018

3 பேர் தான் அரசில் இணைவார்கள்: நாங்கள் எதிர்க்கட்சி: தயாசிறி!ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மூன்று பேரே அரசில் இணையவுள்ளதாகவும் ஏனையோரை எதிர்க்கட்சியில் அமரும்படி ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் தயாசிறி ஜயசேகர.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 21 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை துமிந்த தலைமையிலான மஹிந்த அதிருப்தியாளர்கள் குழு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், பௌசி, பியசேன கமகே மற்றும் ஏலவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்த மனுஷ நானாயக்கார தவிர வேறு யாரும் அரசில் இணைய மாட்டார்கள் என தற்போது தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment