நாடாளுமன்றைக் கலைக்க உத்தரவிட்டது சட்ட விரோதம்: உ.நீதிமன்றம் தீர்ப்பு! - sonakar.com

Post Top Ad

Thursday 13 December 2018

நாடாளுமன்றைக் கலைக்க உத்தரவிட்டது சட்ட விரோதம்: உ.நீதிமன்றம் தீர்ப்பு!


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நாடாளுமன்றைக் கலைக்க உத்தரவிட்டிருந்தமை அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது என தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.



நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை வழக்குகளை விசாரித்த ஏழு நீதிபதிகள் கொண்ட குழு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 26ம் திகதி பிரதமரை திடீரென மாற்றிய மைத்ரி நாடாளுமன்றையும் கலைத்து ஜனவரியில் பொதுத் தேர்தலை நடாத்தவுள்ளதாக அறிவித்திருந்தார். எனினும் 19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக ஜனாதிபதியின் நடவடிக்கை சட்டவிரோதம் என 13 அடிப்படை உரிமை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே நான்கரை வருடங்களுக்கு முன்பாக நாடாளுமன்றைக் கலைக்க மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானம் சட்டவிரோதமானது என  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment