எதிர்க்கட்சித் தலைவர் பதவி அவசியம் என்றில்லை: சம்பந்தன் - sonakar.com

Post Top Ad

Monday, 17 December 2018

எதிர்க்கட்சித் தலைவர் பதவி அவசியம் என்றில்லை: சம்பந்தன்


நாடாளுமன்ற சம்பிரதாயங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மதிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டுமென்று தமது தரப்பு அதற்காக போராடப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார் ஆர். சம்பந்தன்.


மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என அவரது சகாக்கள் கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணி தனி அரசு அமைத்தாலே இது சாத்தியம் என்கின்ற அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் தற்போது அரசில் இணைந்து கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கூட்டு அமைச்சரவை அமையுமாக இருந்தால் மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராவதில் மீண்டும் சிக்கல்கள் உருவாகும். ஆயினும் தமது தரப்பு இதற்காகக் போராடப் போவதில்லையென சம்பந்தன் தெரிவிக்கின்றமையும் ஸ்ரீலசுக - ஐமசுகூ உறுப்பினர்களே தம்மை கூட்டு எதிர்க்கட்சியென அடையாளப்படுத்தி எதிர்க்கட்சி அந்தஸ்த்தைக் கோருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment