21 SLFP உறுப்பினர்கள் அரசில் இணைய முஸ்தீபு! - sonakar.com

Post Top Ad

Monday, 17 December 2018

21 SLFP உறுப்பினர்கள் அரசில் இணைய முஸ்தீபு!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 21 பேர் அரசில் இணைந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒக்டோபர் 26 முறிந்து போன இரு தரப்பு உறவை மீண்டும் அமைச்சரவையில் புதுப்பித்துக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தரப்பும் ஆர்வம் காட்டியுள்ள போதிலும் தற்போது 21 பேர் வேண்டுகோள் விடுத்துள்ளதால் இது குறித்து தீவிரமாக ஆராயப்படுவதாகவும் ஒரு சிலரை மாத்திரமே இணைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் ஐ.தே.க தெரிவிக்கிறது.

துமிந்த திசாநாயக்கவுடன் சுமார் 10 பேர் மஹிந்த எதிர்ப்பாளர்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் மைத்ரி அவர்களையும் தடுத்து நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment