மக்கள் அபிப்பிராயத்தை அறிய மைத்ரி அடம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 13 December 2018

மக்கள் அபிப்பிராயத்தை அறிய மைத்ரி அடம்!


உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் மக்கள் அபிப்பிராயத்தை அறிவதில் மைத்ரிபால சிறிசேன மிகவும் ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் விமல் வீரவன்ச.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அதற்கான அதிகாரம் இருக்கின்ற போதிலும் அது சட்டரீதியாக ஆதிக்கமற்ற கருத்துக் கணிப்பாக மாத்திரமே இருக்க முடியும் என சட்டவல்லுனர்கள் விளக்கமளிக்கின்றனர்.


ரணிலை நீக்கிய மைத்ரிபால சிறிசேன, நாடாளுமன்றையும் கலைப்பதாக உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மஹிந்த தரப்பு தேர்தலொன்றை நாடி நிற்பதோடு தாமே இடைக்கால அரசென தெரிவிக்கிறது. ஆயினும், மஹிந்த அரசு இயங்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதன் மூலம் பழைய அரசை நிறுவி அதனூடாக தேர்தலை சந்திக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகின்றது.

யாருடைய நிர்வாகத்தின் கீழ் தேர்தலை நடாத்துவது என்பதிலேயே முரண்பாடு நிலவுகின்ற போதிலும் இரு தரப்பும் தேர்தலுக்கு சாதகமாகவே இதுவரை கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment