மஹிந்தவின் மேன்முறையீட்டை தள்ளிப் போட கோரிக்கை! - sonakar.com

Post Top Ad

Thursday, 13 December 2018

மஹிந்தவின் மேன்முறையீட்டை தள்ளிப் போட கோரிக்கை!


நாளைய தினம் மூவர் கொண்ட நீதிபதிகள் குழு முன் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற மஹிந்த ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டினை தள்ளிப்போடுவதோடு ஆகக்குறைந்தது ஏழு நீதிபதிகள் கொண்ட குழுவால் விசாரிக்கப்பட வேண்டும் என எதிர் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நாடாளுமன்ற கலைப்பு விவகாரத்தை மூன்று நீதிபதிகள் குழு விசாரிப்பதற்கு மஹிந்த தரப்பு எதிர்ப்பு வெளியிட்டதன் பின்னணியிலேயே அது ஏழு பேர் கொண்ட பென்ச்சினால் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், மஹிந்தவின் மேன்முறையீடும் அவ்வாறே விசாரிக்கப்பட வேண்டும் என ரணில் தரப்பு சட்டத்தரிணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை நாடாளுமன்ற கலைப்பு வழக்கின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment