ஜனாதிபதியின் பேச்சில் நம்பிக்கையில்லை: வெல்கம! - sonakar.com

Post Top Ad

Wednesday, 5 December 2018

ஜனாதிபதியின் பேச்சில் நம்பிக்கையில்லை: வெல்கம!


நேற்றிலிருந்து ஒரு வாரத்திற்குள் அரசியல் சர்ச்சைக்குத் தீர்வு காணப் போவதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்த கருத்தை தான் நம்பப் போவதில்லையென தெரிவித்துள்ளார் குமார வெல்கம.மஹிந்த அணியிலிருக்கின்ற போதிலும் நடுநிலையாகப் பேசி வரும் குமார வெல்கம, நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாத தரப்பினர் ஆட்சியை அபகரிக்கத் தேவையில்லையென தெரிவித்து வருகிறார்.

இந்நிலையிலேயே இன்று இவ்வாறு தெரிவித்துள்ள அவர், இரு தரப்புக்கும் பொது வேட்பாளராகும் எண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment