மானிங்கல இப்னு மஸுஊத் அரபுக் கல்லூரி: புதிய மாணவர் அனுமதி - sonakar.com

Post Top Ad

Wednesday, 5 December 2018

மானிங்கல இப்னு மஸுஊத் அரபுக் கல்லூரி: புதிய மாணவர் அனுமதி


நாத்தாண்டிய மானிங்கல இப்னு மஸுஊத் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை சனிக்கிழமை 8-12-2018 இடம்பெறவுள்ளதாக கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம். சி. நஸுருதீன் (பலாஹி) தெரிவித்தார்.


அரபு , ஷரீஆ ஆறு ஆண்டு கால கற்கை நெறிக்கு  பின்வரும் தகைமையுடைய மாணவர்கள் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
2019 ஆண்டு 8 ஆம் தரம் சித்தியடைந்திருத்தல், 14 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல், அல் குர்ஆனைப் பார்த்து திருத்தமாக ஓதத் தெரிந்து இருத்தல், விடுதியில் தங்கி கற்கக் கூடிய தேகாரோக்கியம், நல்லொழுக்கம் உடையவராக இருத்தல்  போன்ற தகைமைகள் இருத்தல் வேண்டும். 

இது தொடர்பாக மேலதிக விபரங்களுக்கு அதிபர் 0773041935 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

-இக்பால் அலி


No comments:

Post a Comment