வழக்கில் தங்களையும் இடைவாதிகளாக சேர்க்கக் கோரும் மஹிந்த அணி! - sonakar.com

Post Top Ad

Tuesday, 4 December 2018

வழக்கில் தங்களையும் இடைவாதிகளாக சேர்க்கக் கோரும் மஹிந்த அணி!


நாடாளுமன்ற கலைப்பு உத்தரவுக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றில் இன்று இடம்பெற்றுள்ள நிலையில் தம்மையும் வழக்கில் இடைவாதிகளாக இணைத்துக் கொள்ளும்படி மஹிந்த அணியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.வழக்கறிஞர்களான மஹிந்த அணி உறுப்பினர்ள் பவித்ரா வன்னியாராச்சி, செனவிரத்ன, அநுர பிரியதர்சன யாப்பா, சிசிர ஜயகொடி, பிரியானி விஜேவிக்ரம, சந்திரசிறி கஜதீர, லக்ஷ்மன் பெரேரா, வசந்த பெரேரா, டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி, அநுரத்த ஜயரத்ன ஆகியோரே இவ்வாறு இடைவாதிகளாக இணைய மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

முதல் நாள் விசாரணைகள் இன்று ஏலவே முடிவுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment