உச்ச நீதிமன்றில் இன்றைய விசாரணை முடிவு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 4 December 2018

உச்ச நீதிமன்றில் இன்றைய விசாரணை முடிவு!


நாடாளுமன்றைக் கலைப்பதற்கான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு எதிரான அடிப்படை உரிமைகள் மீதான இன்றைய விசாரணைகள் சற்று முன்னர் நிறைவு பெற்றுள்ளது.நாளை விசாரணைகள் தொடரவுள்ள அதேவேளை, மைத்ரிபால சிறிசேன அரசியல் சட்டத்தைத் தவறாக புரிந்திருப்பதுடன் தான் தோன்றித்தனமாக அரசியல் சட்டம் செயற்படுத்தப்படுவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் எனவும் மனுதாரர்கள் தார்பில் நீதிமன்றில் வாதிக்கப்பட்டிருந்தது.

தமது வசதிக்கேற்ப அரசயில் சட்ட விதிகளின் பகுதிகளை பிரித்து, அதன் மூலம் புதிய அர்த்தம் கற்பிக்க முடியாது என ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழு முன்நிலையில் நீண்ட வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை விசாரணை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment