ஒரு கேள்வி கேட்டேன்; மைத்ரி வாயடைத்துப் போனார்: மனோ! - sonakar.com

Post Top Ad

Tuesday, 4 December 2018

ஒரு கேள்வி கேட்டேன்; மைத்ரி வாயடைத்துப் போனார்: மனோ!


நேற்றைய சந்திப்பின் போது தான் சிங்களத்தில் மைத்ரியிடம் ஒரு கேள்வி கேட்டதாகவும் அவர் வாயடைத்து போனதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் நா.உறுப்பினர் மனோ கணேசன்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இத்தனை முரண்பாடுகள் இருந்தால் அவற்றை இப்போது சொல்வது போல் அப்போது ஐக்கிய தேசிய முன்னணியின் ஏனைய கட்சிப் பிரதிநிதிகளையாவது அழைத்து ஏன் விளாவாரியாக சொல்லவில்லை? அவ்வாறு சொல்லியிருந்தால் ஐ.தே.க தவிர்ந்த ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து முரண்பாடுகளை களைய உதவியிருப்போமே என தான் சிங்களத்தில் தெரிவித்ததாகவும் அதற்கு பதில் கூறாது மைத்ரி வாயடைத்து போனதாகவும் விளக்கமளித்துள்ளார் மனோ.

இந்நிலையில் அடுத்த ஏழு தினங்களுக்குள் தான் தீர்வளிக்கப் போவதாகவும் ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை சீரழித்ததாகவும் இன்றும் மைத்ரிபால சிறிசேன விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment