சம்பந்தன் - அநுர திசாநாயக்கவுக்கு பதிலாக மஹிந்த - அமரவீர! - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 December 2018

சம்பந்தன் - அநுர திசாநாயக்கவுக்கு பதிலாக மஹிந்த - அமரவீர!


மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய. எனினும், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை தற்போது கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றுவதில் இழுபறி நிலவுகிறது.


இதேவேளை, பிரதம எதிர்க்கட்சி கொறடாவாகப் பணியாற்றி வந்த ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கு பதிலாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர நியமிக்கப்படுவதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்சமயம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள அதேவேளை, மஹிந்த, நாமல் உட்பட பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்புரிமை பெற்றுள்ளதால் இது தொடர்பில் சபையில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment