தீர்ப்பு வந்ததும் தேர்தல் இல்லாவிட்டால் எதிர்க்கட்சி: யாப்பா! - sonakar.com

Post Top Ad

Thursday, 13 December 2018

தீர்ப்பு வந்ததும் தேர்தல் இல்லாவிட்டால் எதிர்க்கட்சி: யாப்பா!


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றைக் கலைக்க முயற்சித்தமை சட்டவிரோதம் என தீர்ப்பளிக்கப்பட்டாலும் ஆளுங்கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகியதில் மாற்றமில்லையெனவும் எதிர்க்கட்சியாகவே செயற்படும் எனவும் தெரிவிக்கிறார் லக்ஷ்மன் யாப்பா.


அவ்வாறில்லையேல், தீர்ப்பு ஜனாதிபதியின் நடவடிக்கையை நியாயப்படுத்துமாக இருந்தால் உடனடியாக தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் விளக்கமளிக்கிறார்.

எனினும், ஜனாதிபதியின் ஜனவரி தேர்தல் அறிவிப்பு சாத்தியமற்றது எனவும் மஹிந்த அணி ஒரு வருடம் பதவிகளை அனுபவித்து, அதனூடாக நிவாரணங்கள் எனும் பெயரில் சலுகைகளை அறிவித்து அதன் பயன்பாட்டிலேயே தேர்தலுக்குச் செல்லும் என ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துரைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment