அகில தனஞ்சய சர்வதேச போட்டிகளில் பங்கேற்கத் தடை! - sonakar.com

Post Top Ad

Monday, 10 December 2018

அகில தனஞ்சய சர்வதேச போட்டிகளில் பங்கேற்கத் தடை!


இலங்கை கிரிக்கட் அணியின் அகில தனஞ்சய சர்வதேச போட்டிகளில் பங்கேற்கத் தடை விதித்துள்ளது சர்வதேச கிரிக்கட் கவுன்சில்.


தனஞ்சயவின் பந்து வீச்சு தொடர்பில் இங்கிலாந்து அணி சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில் இது குறித்து ஆராய்ந்த சுயாதீன குழு அறிக்கையின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் அனுமதியுடன் உள்நாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment