'நபி நாயகதுமா': சிங்கள மொழியில் நபிகளாரின் வரலாற்று நூல் வெளியீடு - sonakar.com

Post Top Ad

Tuesday 11 December 2018

'நபி நாயகதுமா': சிங்கள மொழியில் நபிகளாரின் வரலாற்று நூல் வெளியீடு


எங்களுடைய சகல பௌத்த சமய செயற்பாடுகளைப் போன்றே இஸ்லாம், இந்து கிறிஸ்தவம் ஆகிய சமயங்களும் மனிதர்களுடைய வாழ்க்கை முறையினை  மேம்படுத்துவதற்காக முன்மாதரி மிக்க அம்சங்களையே கொண்டுள்ளது. இதற்காக அல்லாஹ்வினால் மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட தூதராகிய நபி நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றையே கொண்ட நூலே வெளிக்கொணரப்பட்டுள்ளது. உலகில் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு ஏற்ப   நபி (ஸல்)  அவர்கள்  ஒரு முன்மாதரிமிக்க மனிதராக  வாழ்ந்து காட்டியுள்ளார்கள். எந்த மனிதனாக இருந்தாலும் சரி தத்தம்  சமயங்களைப்; பனிபற்றி நடப்பதன் மூலம் ஒரு போதும் வழி தவற மாட்டார்கள். என்று குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.  

தமிழ் நாட்டு எழுத்தாளர் அப்துர் ரஹீம் எழுதிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாறு பற்றிய நூலை சிங்கள மொழிபெயர்ப்பில் குருநாகல் பொத்துஹெர எம். எஸ். எம்.  இக்பால் எழுதிய  



 ' நபி நாயகதுமா'  என்னும் நூல் வெளியீட்டு விழா குருநாகல் தம்புள்ள வீதியிலுள்ள  டைன்ஹுட் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அசோக  இவ்வாறு இதனைத் தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் 

இந்த உலகில் நபி நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இஸ்லாம் மார்க்கம் பின்பற்றப்படுகின்றது.  அவர்கள் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கேற்ப நபி நாயகம் (ஸல்) வாழும்படி கூறியுள்ளார்கள். இது தான் மனிதர்களுடைய எதிர்பார்ப்பும் ஆகும். உலகில் 700 கோடி மக்கள் உள்ளனர். இதில் 150 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். இலங்கையில் 2 கோடி 14 இலட்சம்  மக்கள் வாழுகின்றனர். இதில் 21 இலட்சம் பேர்  முஸ்லிம்கள் வாழுகினறனர். 31 இலட்சம் தமிழ் மக்கள் வாழுகின்றனர். சமய ரீதியாகப் பிரிந்து இருந்தாலும் நாங்கள் எல்லோரும் மனிதர்கள். தாய் தாந்தையர்களின் வழிதோன்றல்களாக தத்தம் சமயங்களை நாங்கள் பின்பற்றி வருகின்றோம். ஒரு விசயத்தை தெரிந்து படித்துக் கொள்வதன் மூலம் தான் அதன் சிறப்பை அறிந்து கொள்ளலாம். உண்மையிலேயே இந்த நூல்  சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிக்கொணர்ந்த வரவேற்கத் தக்கவையாகும். இதனை சிங்கள  மக்களும் வாசித்து அறிந்து கொள்வதற்கு பெரும் பயனை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

இதில்  பிரச்சினை இருக்கினறது.  நாங்கள்  எங்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை. இந்த உலகில் எவ்வளவு காலம் இருப்போம் என்று ஆகும். நாம் செய்யும் பிழையான வேலைகளுக்காக இந்த உலகில் பிறந்து எவ்வளவு காலம் இருப்போம் என கூடுதலான மக்கள் சரியாகச் சிந்திப்பதில்லை.


எமது  நாட்டினுடைய  உயிர் வாழ்க்கையின் வயது எல்லை ஆண்கள் 75 வயதாகும். பெண்கள் 79 ஆகும்.  உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஒருவருடைய உயது எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றோம்;. அடித்துக் கொள்கின்றோம், கொலை கொள்ளை, அரசியல் சூழ்ச்சி, சூது வாது போன்ற தீய காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மரணத்தைப் பற்றி நினைத்து வாழ்பவனாயின் ஒரு போதும் தீய குண செயற்பாடுகளில் இருந்து விலகி நடப்பவனாக இருப்பான். நபி நாயகம் என்பவர் நம்பிக்கைக்கும் உண்மைக்கும் பாத்திரமானவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் கலீல், பேராதனை போதனா வைத்தியசாலையின்  வைத்திய அதிகாரி ஏ. ஏ. எம். எஸ். சித்தீக், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நஷீர், குருநாகல்  பொலிஸ் அதிகாரி ,உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலி




No comments:

Post a Comment