மைத்ரியின் மனநல பரிசோதனை: சட்ட வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு! - sonakar.com

Post Top Ad

Monday 10 December 2018

மைத்ரியின் மனநல பரிசோதனை: சட்ட வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு!



ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை மன நல பரிசோதனைக்குட்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் சட்ட வல்லுனர்கள் இரு வேறு நிலைப்பாடுகளை வெளியிட்டுள்ளனர்.

19ம் திருத்தச் சட்டத்தினூடாக பொது சேவையில் உள்ள ஒருவரை இவ்வாறு பரிசோதனைக்குட்படுத்தக் கோரும் உரிமை குடிமக்களுக்கு இருக்கின்ற அதேவேளை அதன் முதற்கட்டமாக பொலிசில் முறைப்பாடு ஒன்று பதியப்பட வேண்டும் எனவும் அதன் பின்னர் நீதிமன்றில் இதற்கான நியாயத்தை விளக்க வேண்டும் என்கிற போதிலும் ஜனாதிபதியின் சிறப்புரிமைகள் அவரை இவ்வாறு பரிசோதனைக்குட்படுத்துவதை தவிர்ப்பதாக ஒரு சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.


இதேவேளை, ஜனாதிபதியும் பொது சேவை ஊழியர் எனும் அடிப்படையில் அவரை பரிசோதனைக்குட்படுத்த முடியும் எனவும் அவ்வாறான கோரிக்கையை பரிசீலிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றுக்கு இருப்பதாகவும் மேலும் சில சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒக்டோபர் 26ம் திகதி முதல் உருவான அரசியல் சர்ச்சை மற்றும் ஜனாதிபதியின் தொடர் நடவடிக்கைகளின் பின்னணியில் இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் இது தொடர்பிலான நீதிமன்ற நிலைப்பாடு எவ்வாறு அமையப் போகிறது என்பதை அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment