அலரி மாளிகையில் ஐ.தே.கட்சியினர் விசேட சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 December 2018

அலரி மாளிகையில் ஐ.தே.கட்சியினர் விசேட சந்திப்பு!


நாளைய தினம் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்றிரவு அலரிமாளிகையில் விசேட சந்திப்பொன்றை நடாத்தியுள்ளனர்.


நாளைய தினம் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் பிரேரணையொன்று கொண்டு வரப்படவுள்ள நிலையில் அதனை சஜித் பிரேமதாசவே சமர்ப்பிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மஹிந்த மற்றும் அவரது அமைச்சு மீதான தடை விவகார வழக்கும் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற கலைப்பு வழக்கின் தீர்ப்பும் நாளை வெளியிடப்படக்கூடும் எனும் எதிர்பார்ப்பு அரசியல் மட்டத்தில் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment