7 நாள் வாக்குறுதியைத் தவற விட்ட மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 December 2018

7 நாள் வாக்குறுதியைத் தவற விட்ட மைத்ரி!


ஏழு தினங்களுக்குள் நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வை அறிவிக்கப் போவதாக தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதனைத் தவற விட்டுள்ளார்.நிறைவேற்று அதிகார ஜனாதிபதியெனும் அடிப்படையில் பல்வேறு அதிகாரங்கள் தனக்கிருப்பதாகக் கருதும் மைத்ரிபால, நீதிமன்றையும் விட உயர்ந்த நிலையில் தன்னால் இயங்க முடியும் என்பதாகக் கருதியதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்திலும் தலையிட முனைந்து பாரிய எதிர்ப்புகளை சந்தித்துள்ளார் ஜனாதிபதி.

சர்வதேச மட்டத்தில் மைத்ரிபால சிறிசேன தனது அதிகாரம் வரையறுக்கப்பட்டமை தொடர்பிலான தெளிவற்ற நிலையிலேயே சர்வாதிகாரியாக நடந்து கொள்ள முயல்வதாக கருத்து வெளியிடப்பட்டு வரும் நிலையில் தனது 7 நாள் வாக்குறுதியையம் மைத்ரி தவற விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment