நீதிமன்ற தீர்ப்பை முந்திக் கொள்ள முனையும் மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Saturday 1 December 2018

நீதிமன்ற தீர்ப்பை முந்திக் கொள்ள முனையும் மைத்ரி!


நாடாளுமன்றைக் கலைப்பதற்கு மைத்ரிபால சிறிசேன எடுத்த முடிவை பெரும்பாலும் வாபஸ் பெறுவார் என பல தரப்பட்ட தகவல் மூலங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் நான்கரை வருடங்களுக்கு முன்பாக நாடாளுமன்றம் கலைக்க்பட முடியாது என்பதை ஜனாதிபதி தற்போது ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை, நீதிமன்ற தீர்ப்பு மைத்ரிக்கு எதிராக அமைந்தால் அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வருவதன் மூலம் மைத்ரியை பதவி நீக்கம் செய்ய முடியும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், பல வாரங்களாக தொடரும் அரசியல் சர்ச்சைக்கு முடிவொன்றைக் காணும் நிமித்தம் மைத்ரி குறித்த வர்த்தமானியை வாபஸ் பெறுவதோடு மீண்டும் புதிய பிரதமரை நியமிக்கக் கோரும் பிரேரணையொன்றையும் நிறைவேற்றும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மஹிந்த ராஜபக்ச தரப்பு பெரமுனவின் மொட்டுச் சின்னத்திலேயே தாம் தேர்தலை எதிர்நோக்கப்போவதாக தீர்க்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ள அதேவேளை, மைத்ரிபாலவின் தலைமையிலான ஸ்ரீலசுகட்சி ஏறத்தாழ செயலிழந்து போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment