மைத்ரிக்கு எதிராக எதிர்பார்க்கப்படும் ரணில் - மஹிந்த இணைவு - sonakar.com

Post Top Ad

Saturday, 1 December 2018

மைத்ரிக்கு எதிராக எதிர்பார்க்கப்படும் ரணில் - மஹிந்த இணைவு


மைத்ரிபால சிறிசேனவின் அவசர நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள மஹிந்தவும் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து மைத்ரிபால சிறிசேனவுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இரு தரப்பிலும் அதிகரித்து வருகிறது.

மஹிந்த தரப்பின் 'சட்ட வல்லுனர்களே' மைத்ரிபால சிறிசேனவுக்கு அரசியல் யாப்பு தொடர்பில் ஆலோசனை வழங்கியதாக  ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, ஆறு தடவைகள் நாடாளுமன்றில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் மஹிந்த ராஜபக்சவால் நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற முடியாது என்பதை மைத்ரிபாலவும் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்.



இந்நிலையில், நாடாளுமன்ற கலைப்பும் தவறாகிவிடும் என்ற அச்சத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ள மைத்ரி புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பில் பரிசீலிக்கலாம் எனக் கூறி மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் தொடர முடியாதென்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

இப்பின்னணியில் மஹிந்த - ரணில் இணைந்து மைத்ரிக்கு எதிராக நாடாளுமன்றில் குற்றப்பிரேரணையைக் கொண்டு வர வேண்டும் என இரு தரப்புடனும் நட்புறவைப் பேணும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment