எதிர்க்கட்சியாக இயங்கத் தயார்: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Thursday, 13 December 2018

எதிர்க்கட்சியாக இயங்கத் தயார்: கம்மன்பில


மஹிந்த ராஜபக்ச பிரதமராக இயங்குவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, 19ம் திருத்தச் சட்டத்தை மைத்ரிபால சிறிசேன விளங்கி வைத்திருக்கும் விதம் தவறென்பதை நிரூபிக்கும் வகையில் நாடாளுமன்ற கலைப்பும் சட்டவிரோதம் என இன்று தீர்ப்பளித்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்கவை ஐந்தாவது தடவையாகவும் பிரதமராக தொழிற்பட அனுமதித்து எதிர்க்கட்சியாக இயங்கப் போவதாக தெரிவிக்கிறார் கம்மன்பில.


இன்றைய தீர்ப்பு பாதகமாக வந்தால் எதிர்க்கட்சியாக இயங்கத் தயார் என ஏலவே லக்ஷ்மன் யாப்பா இன்று காலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி - மஹிந்த அணியிடையே தீவிர கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன் ரணில் விக்கிரமசிங்கவும் தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நாளைய தினம் மஹிந்த ராஜபக்சவின் மேன்முறையீட்டின் மீதான விசாரணை குறித்த உச்ச நீதிமன்றின் நிலைப்பாட்டையறிந்து செயற்பட வேண்டும் எனவும் பெரமுனவின் ஒரு தரப்பு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment