தீர்ப்பு என்னவாக இருந்தாலும் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயார்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Sunday, 9 December 2018

தீர்ப்பு என்னவாக இருந்தாலும் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயார்: மைத்ரி


நாடாளுன்ற கலைப்புக்கு எதிரான வழக்கு விசாரணை முடிவுற்று தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் தான் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகவுள்ளதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


கடுமையான வாதப் பிரதிவாதங்களின் பின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை உலகமே எதிர்பார்த்திருக்கும் அதேவேளை தீர்ப்பு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை பாதிக்காது என ஜனாதிபதி தரப்பு நம்புகிறது.

இதேவேளை, 19ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை செய்யவும் தாம் தயார் என தெரிவித்து வரும் நிலையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment