பேருவளை: நவீன ரக ஆயுதங்களுடன் 40 வயது நபர் கைது! - sonakar.com

Post Top Ad

Sunday, 9 December 2018

பேருவளை: நவீன ரக ஆயுதங்களுடன் 40 வயது நபர் கைது!


பேருவளை பகுதியில் நவீன ரக ஆயுதங்கள், தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.குறித்த நபா, முன்னராக பதுராலிய பகுதயில் துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னணியில் MP5K  ரக துப்பாக்கி உட்பட 8 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் வசமிருந்து ஹெரோயின் மற்றும் நாட்டுத் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment