நாடாளுமன்ற கலைப்பு: வழக்கு விசாரணை தொடர்கிறது - sonakar.com

Post Top Ad

Tuesday 4 December 2018

நாடாளுமன்ற கலைப்பு: வழக்கு விசாரணை தொடர்கிறது


ஜனாதிபதியின் நாடாளுமன்ற கலைப்பு உத்தரவுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகியுள்ளது. டிசம்பர் 4,5 மற்றும் 6ம் திகதிகளில் விசாரணை இடம்பெற்று 10ம் திகதிக்குள் தீர்ப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் 13 அடிப்படை உரிமை வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைகள் இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ள அதேவேளை ஜனாதிபதி தனது நாடாளுமன்ற கலைப்புக்கான உத்தரவை மீளப்பெறுவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்தமையும் தற்சமயம் மைத்ரி அமைதி காக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment