ஜனாதிபதி அரசியல் சட்டங்களை பின்பற்றினால் 'போதும்': ரணில்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 4 December 2018

ஜனாதிபதி அரசியல் சட்டங்களை பின்பற்றினால் 'போதும்': ரணில்!


ஜனாதிபதி நாட்டின் அரசியல் சட்டதிட்டங்களைப் பின்பற்றினால் போதும் என தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.

நாட்டின் பிரதமராக யார் வர வேண்டும் என்பது ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்குரிய விடயமன்று எனவும் அரசியல் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டுள்ள ஒருவரே பிரதமராக முடியும் எனவும் ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.ஆயினும், 225 உறுப்பினர்களும் இணங்கினாலும் கூட தான் ரணிலைப் பிரதமராக நியமிக்கப் போவதில்லையெனவும் அதற்கான அதிகாரம் தனக்குண்டு எனவும் மைத்ரிபால சிறிசேன தெரிவித்து வருகிறார்.

19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக 'இதுவே' அரசியல் நடைமுறையென இரு தரப்பும் தெரிவித்து வருகின்றமையும் நாட்டில் தற்போது அரசாங்கம் ஒன்று இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment