நாடாளுமன்ற கலைப்பு வழக்கு: இன்று இறுதி விசாரணை! - sonakar.com

Post Top Ad

Thursday, 6 December 2018

நாடாளுமன்ற கலைப்பு வழக்கு: இன்று இறுதி விசாரணை!


ஜனாதிபதியின் நாடாளுமன்ற கலைப்பு உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையின் இறுதி நாள் இன்றாகும்.


13 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான சமர்ப்பணங்கள் செவிமடுக்கப்பட்டுள்ளதுடன் சட்டமா அதிபர் அரச தரப்பிலிருந்து நேற்றைய தினம் விளக்கமளித்திருந்தார். இதன் போது உச்ச நீதிமன்றுக்கு இவ்வழக்கை விசாரிக்க சட்டரீதியான அதிகாரமில்லையென அவர் வாதிட்டிருந்தார்.

எனினும், அரசியலமைப்பு சட்டத்தை மைத்ரிபால சிறிசேன தனக்கேற்றவாறு மாற்றிக் கொள்ள முயற்சிப்பதாக எதிர்த்தரப்பு வாதிட்டுள்ளது. இன்றைய தினம் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் வாதத்துடன் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளமை யம் நாளைய தினம் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment