மஹிந்தவுக்கு வினையான மைத்ரியின் செயல்! - sonakar.com

Post Top Ad

Thursday, 6 December 2018

மஹிந்தவுக்கு வினையான மைத்ரியின் செயல்!


மஹிந்த ராஜபக்ச பிரதமராக இயங்குவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை எதிர்த்து மஹிந்த தாக்கல் செய்த மேன்முறையீட்டுக்கு இதுவரை தேதி வழங்கப்படவில்லை.இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் நியமனத்தை மைத்ரி தாமதப்படுத்தியதே இதற்கான காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்ப உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டிய இடத்துக்கு ஏழு பேரையே நியமித்த மைத்ரி, எஸ். துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோரின் நியமனங்களை வழங்காது தாமதப்படுத்தியுள்ளார். இந்நிலையில் ஏனைய ஏழு நீதிபதிகளும் நாடாளுமன்ற கலைப்புக்கெதிரான வழக்கில் ஈடுபட்டுள்ளதால் மஹிந்தவின் மேன்முறையீட்டை விசாரிக்க நீதிபதிகள் இல்லாமையே அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படாமைக்குக் காரணம் என சட்டத்தரணிகள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment