மஹிந்தவின் மேன்முறையீட்டால் உடனடி பலன் இல்லை! - sonakar.com

Post Top Ad

Monday, 3 December 2018

மஹிந்தவின் மேன்முறையீட்டால் உடனடி பலன் இல்லை!


மேன்முறையீட்ட நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டாலும் அங்கு இது தொடர்பிலான 'தீர்ப்பு' வழங்கப்படும் வரை இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் என விளக்கமளிக்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.நாளைய தினம் மஹிந்த தரப்பு மேன்முறையீடு செய்தாலும் அதற்கான தீர்ப்பு உடனடியாகக் கிடைக்கப் போவதில்லையென்பதால் மேன்முறையீட்டால் உடனடி பலன் எதுவுமில்லையென தெரிவிக்கப்படுவதோடு தடையுத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளைய தினமே தாம் தடையுத்தரவு விவகாரங்களை முழுமையாகப் படித்து விட்டு முடிவெடுக்கப் போவதாக மைத்ரி தெரிவிக்கின்றமையும் எக்காரணம் கொண்டும் ரணிலை நியமிக்கப் போவதில்லையென அடம் பிடிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment