எதிர்காலத்துக்கு 'முன்னுதாரணமான' அரசமையும்: சம்பிக்க! - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 December 2018

எதிர்காலத்துக்கு 'முன்னுதாரணமான' அரசமையும்: சம்பிக்க!


தகுதியற்ற, குடும்பத்தினர் - சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கு பதவிகளை வழங்கி நாட்டை சூறையாடாமல் எதிர்காலத்துக்கு முன்னுதாரணமாகத் திகழக்கூடிய அரசொன்று அமையவுள்ளதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.



ஒன்றரை வருட காலத்துக்கே இவ்வரசு தொடரக்கூடிய அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக மேலும் பலம் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது.  இந்நிலையில் 20ம் திருத்தச் சட்டம் ஊடாக நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழித்து நாடாளுமன்ற அதிகாரத்தை மையப்படுத்திய ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியுள்ளது.

இதன் பின்னணியில் இன்றைய தினம் ஜே.வி.பியினரால் முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணையை ஏனைய கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என ஐ.தே.க கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை அமைச்சரவையையும் 30 பேருடன் சுருக்கிக் கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி வேண்டாம் என தெரிவித்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் சமூக மட்டத்தில் பாரிய சந்தேகம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment