ரணிலோடு கூட்டில்லை: மைத்ரி திட்டவட்டம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 13 December 2018

ரணிலோடு கூட்டில்லை: மைத்ரி திட்டவட்டம்!


தான் ரணில் விக்கிரமசிங்கவோடு சேர்ந்தியங்கப் போவதில்லையென்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.ஒக்டோபர் 26ம் திகதி திடீரென பிரதமரை நீக்கி ஜனநாயக சக்திகளின் ஒட்டு மொத்த எதிர்ப்பை சந்தித்த மைத்ரிபால சிறிசேன, நவம்பர் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றையும் கலைக்க உத்தரவிட்டு அரசியல் சர்ச்சையை உருவாக்கியிருந்தார். இதன் பின்னணியில் மஹிந்தவை நியாயயப்படுத்தியும் ரணிலை விமர்சித்தும் வந்த அவர், இன்று உச்ச நீதிமன்றின் தீர்ப்பின் மூலம் அவமானத்தை சந்திக்க நேர்ந்துள்ளது.

எனினும், நாடாளுமன்ற கலைப்புக்கு மேலாக பிரதமர் நியமனம் தொடர்பில் நாளை நீதிமன்றின் அபிப்பிராயம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை அறிந்து செயற்படப் போவதாக அவர் தெரிவிக்கின்றமையும் ஏலவே தாம் எதிர்க்கட்சியாக செயற்படத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment