பொதுத் தேர்தலை நடாத்தித் தான் சிக்கலை தீர்க்க முடியும்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Sunday, 2 December 2018

பொதுத் தேர்தலை நடாத்தித் தான் சிக்கலை தீர்க்க முடியும்: மஹிந்த


பொதுத் தேர்தலை நடாத்துவதன் மூலமே தற்போது நிலவும் அரசியல் சிக்கலைத் தீர்க்க முடியும் என்கிறார் மஹிந்த ராஜபக்ச.


நாடாளுமன்ற பெரும்பர்னமையைப் பெறுவதற்கு கடந்த ஒரு மாத காலமாக முயன்றும் முடியாதுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சவுக்கு பதிலாக வேறு ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திக்குள்ளாகியுள்ள நிலையில் இன்றைய தினம் மஹிந்த இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

யுத்த காலத்திலேயே தான் மாகாண சபை தேர்தல்களை நடாத்திய போதிலும் தற்சமயம் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமலேயே தேர்தல் பின்போடப்பட்டு வருவதாகவும் இவ்வாறான சூழ்நிலையில் தற்போது உருவாகியுள்ள சிக்கலை பொதுத் தேர்தல் மூலமே ஜனநாயக வழியில் தீர்த்துக்கொள்ள முடியும் எனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment