என்டறுதென்னை: வன்முறையை எதிர்த்து நின்ற பி.செயலாளர் கௌரவிப்பு - sonakar.com

Post Top Ad

Sunday 2 December 2018

என்டறுதென்னை: வன்முறையை எதிர்த்து நின்ற பி.செயலாளர் கௌரவிப்பு


கடந்த மார்ச் மாதம் கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது தமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் செய்த பாதக செயலுக்கு அப்போதே பகிரங்கமாக மன்னிப்பு கோரியதுடன் என்டறுதென்னை பகுதிக்கு இழப்பீடுகளைப் பெற்றுத் தருவதில் அயராது உழைத்த ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலாளர் ஜனக ஜயசுந்தர மற்றும் கிராம அதிகாரி பிரதீப் வல்தெனிய ஆகியோர் இன்று என்டறுதென்னை அபிவிருத்தி நிதியத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.



என்டறுதென்னை முஸ்விம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது இருவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது, அங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர், தனது சமூகத்தின் செயலுக்கு தான் அன்று கோரிய மன்னிப்பு இன்றும் பொருந்தும் எனவும் பிறப்பால் யாரும் பிரிந்திருப்பதில்லையெனவும் தெரிவித்திருந்தார்.


-மொஹொமட் ஆஸிக்

No comments:

Post a Comment