மஹிந்த தவறென்கிறார் - அதுவே சரியென்கிறார் ரணில்! - sonakar.com

Post Top Ad

Sunday, 2 December 2018

மஹிந்த தவறென்கிறார் - அதுவே சரியென்கிறார் ரணில்!


நாடாளுமன்ற உறுப்பினர்களே மக்களின் நேரடி பிரதிநிதிகள் எனும் அடிப்படையிலும் சட்டவாக்க சபை உறுப்பினர்கள் எனும் அடிப்படையிலும் நாடாளுமன்றிடமே முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இருக்க வேண்டும் எனவும் 19ம் திருத்தச் சட்டத்தினூடாக இலங்கை நாடாளுமன்றம் அந்த அதிகாரத்தைப் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.19ம் திருத்தச் சட்டம் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டமையானது மிகத் தவறான செயல் என இன்றைய தினம் நீண்ட நேரம் மஹிந்த ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.

எனினும், மக்கள் அதிகாரம் நாடாளுமன்றுக்கே வழங்கப்பட்டிருப்பதனால் தனி நபராக அன்றி நாடாளுமன்றமே முக்கிய தீர்மானங்களையும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அப்போதுதான் மக்களின் உரிமைகளும் நீதியும் பாதுகாக்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment