
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமது கட்சிக்குத் தாவிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீண்டும் திரும்பிச் செல்லப் போவதில்லையென நம்பிக்கை வெளியிட்டுள்ளார் பசில் ராஜபக்ச.
ஐக்கிய தேசியக் கட்சியும் பெரும்பாலும் தேர்தலை நடாத்துவதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ளும் என்ற சூழ்நிலை நிலவுகின்ற நிலையில் பசில் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கட்சி தாவிய வசந்த சேனாநாயக்க பல தடவைகள் பக்கம் தாவி ஈற்றில் தான் சுயாதீனமாக இயங்கப் போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment