ஜனநாயகத்துக்கு மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Sunday, 16 December 2018

ஜனநாயகத்துக்கு மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்: மைத்ரி


நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் ஜனநாயகத்துக்கும் மதிப்பளித்தே மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்ததாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் தவறாக விளங்கிக் கொண்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் கையொப்பமிட்டாலும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லையென மைத்ரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நீதிமன்ற தலையீட்டின் பின் 117 பேரின் ஆதவை நிரூபித்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்துள்ள மைத்ரி, தான் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்துள்ளதாக தெரிவித்துள்ளமையும் மஹிந்த ராஜபக்சவுக்க எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும் அதனை முன்னர் ஏற்க மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தககது.

No comments:

Post a comment