பொதுத் தேர்தல்: மக்கள் அபிப்பிராயம் அறிய மைத்ரி முஸ்தீபு! - sonakar.com

Post Top Ad

Monday, 10 December 2018

பொதுத் தேர்தல்: மக்கள் அபிப்பிராயம் அறிய மைத்ரி முஸ்தீபு!


உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியிடப்பட்டதும் பொதுத் தேர்தலை நடாத்துவது குறித்து மக்கள் கருத்தறிய ஜனாதிபதி விரும்புவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.அரசியலமைப்பு சட்டத்தை தான் விளங்கி வைத்திருக்கும் வடிவம் போக, உச்ச நீதிமன்றின் விளக்கவுரைக்காகக் காத்திருப்பதாகவும் அதன் பின் அதற்கேற்ப அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் மைத்ரி தெரிவித்துள்ள அதேவேளை உச்ச நீதிமன்ற தீர்ப்பு இவ்வாரம் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் என தீர்ப்பானால், நான்கரை வருடத்தில் பொதுத் தேர்தலை நடாத்துவது குறித்தே ஜனாதிபதி ஆராய்வதாக அறியமுடிகிறது.

No comments:

Post a Comment