இன்னும் சில மணி நேரத்தில் உச்ச நீதிமன்ற 'தீர்ப்பு'! - sonakar.com

Post Top Ad

Thursday, 13 December 2018

இன்னும் சில மணி நேரத்தில் உச்ச நீதிமன்ற 'தீர்ப்பு'!


இன்று மாலை 4 மணியளவில் உச்ச நீதிமன்றம், நாடாளுமன்ற கலைப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.உச்ச நீதிமன்ற பதிவாளரினால் வெளியிடப்பட்ட தகவலை ஆதாரங்காட்டி இந்நம்பிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுத்த உத்தரவு சட்டவிரோதமானது எனவும் அடிப்படை உரிமை மீறல் எனவும் 13 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அதன் விசாரணைகள் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment