28 அமைச்சர்களுக்கு மேல் அனுமதிக்க வேண்டாம்: கம்மன்பில! - sonakar.com

Post Top Ad

Monday, 17 December 2018

28 அமைச்சர்களுக்கு மேல் அனுமதிக்க வேண்டாம்: கம்மன்பில!


ஜனாதிபதி - பிரதமர் உட்பட மொத்த அமைச்சரவை 30 பேர் கொண்டதாகவே இருக்க வேண்டும் என அரசியலமைப்பு தெரிவிப்பதாகவும் அதனால், 28 பேருக்கு மேல் யாருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் உதய கம்மன்பில.சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட மஹிந்த அரசில் 27 அமைச்சர்களே நியமிக்கப்பட்டிருந்ததாகவும், வசந்த சேனாநாயக்க விலகியதுடன் அதன் எண்ணிக்கை 26 ஆக குறைக்கப்பட்டிருந்ததாகவும் அது சிறந்த முன்னுதாரணம் எனவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், சு.க - ஐமசுகூட்டமைப்பு உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர முயற்சித்து வரும் நிலையில் அமைச்சு பொறுப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment