மஹிந்த - மைத்ரி தரப்பு ஜனாதிபதி செயலகத்தில் அவசர சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 14 December 2018

மஹிந்த - மைத்ரி தரப்பு ஜனாதிபதி செயலகத்தில் அவசர சந்திப்பு!


மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்ரி அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்தில் அவசர சந்திப்பொன்றில் கலந்து கொண்டுள்ளதாக அறியமுடிகிறது.

உச்ச நீதிமன்றம் மஹிந்த பிரதமராக இயங்குவதற்கு எதிரான  தடையை நீக்க மறுத்துள்ள நிலையில் ஜனாதிபதி அரசாங்கம் தொடர்பில் தீர்க்கமான அறிவிப்பொன்றை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.


நாடாளுமன்றில் மஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளை கேள்விக்குட்படுத்த முடியாமல் போயுள்ள நிலையில், இரு தடவைகள் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் ரணில் மீதான நம்பிக்கை பிரேரணைக்கும் 117 பேர் ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில், நேற்றைய தினம் நாடாளுமன்ற கலைப்பும் சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதனால் 19ம் திருத்தச் சட்டத்தை மஹிந்த - மைத்ரி அணி தவறாகவே புரிந்து வைத்திருப்பது தெளிவாகியுள்ளது.

இச்சூழ்நிலையில் இவ்வவசர சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment