பொலிஸ் உடையில் கொள்ளை: மாத்தற 'மல்லி' கைது! - sonakar.com

Post Top Ad

Sunday, 2 December 2018

பொலிஸ் உடையில் கொள்ளை: மாத்தற 'மல்லி' கைது!


கடந்த மாத முற்பகுதியில் பொலிஸ் சீருடையில் வீடொன்றுக்குள் புகுந்து இரத்தினக் கற்களைக் கொள்ளையடித்த சம்பவம் ஒன்றின் பின்னணியில் மாத்தறை மல்லியென அறியப்படும் திசித்த மதுரங்க எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.பன்னிப்பிட்டிய பகுதியில் நவம்பர் 5ம் திகதி இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன் அவ்வேளையில் அங்கிருந்த வெளிநாட்டு பிரஜையொருவர் கடத்திச் செல்லப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த நபரை பொலிசார் இரத்மலானையில் வைத்து நேற்றிரவு கைது செய்துள்ளமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment