மைத்ரி அதிகாரத்தை தவறாக புரிந்துவிட்டார்: நீதிமன்றில் வாதம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 4 December 2018

மைத்ரி அதிகாரத்தை தவறாக புரிந்துவிட்டார்: நீதிமன்றில் வாதம்!


19ம் திருத்தச் சட்டத்தின் பின் நாடாளுமன்றைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு இரு சந்தர்ப்பங்களிலேயே அதிகாரம் உள்ளதாகவும் தற்போதைய ஜனாதிபதி அதனைத் தவறாகப் புரிந்து செயற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் வாதிடப்பட்டுள்ளது.


ஜனாதிபதியின் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கு விசாரணையின் போதே இவ்வாறு வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன், ஒன்றில் நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் ஜனாதிபதியிடம் அவ்வாறான ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட வேண்டும் அல்லது நான்கரை வருடங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்பதே விதிமுறையெனவும் இவை தவிர வேறு எந்த காரணங் கொண்டும் நாடாளுமன்றைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், சட்டவிதிகளைத் தனிமைப்படுத்தி நியாயப்படுத்த முனையும் மஹிந்த தரப்பு, ஜனாதிபதி எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றைக் கலைக்கலாம் என தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment