கமர் நிசாம்தீன் விவகாரம்: சந்தேக நபர் கைதாகி பிணையில் விடுதலை - sonakar.com

Post Top Ad

Tuesday, 4 December 2018

கமர் நிசாம்தீன் விவகாரம்: சந்தேக நபர் கைதாகி பிணையில் விடுதலை


தீவிரவாத தாக்குதல் திட்டங்கள் அடங்கிய குறிப்பொன்றை வைத்திருந்ததாக அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மாணவன் கமர் நிசாம்தீன் விவகாரம், திட்டமிட்ட செயல் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கட் விளையாட்டு வீரர் உஸ்மான் காஜாவின் சகோதரர் அர்சலான் தாரிக் காஜா இன்று கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


இவரே சந்தேகத்துக்குரிய குறிப்பினை கமர் நிசாம்தீனை மாட்டிவிடும் வகையில் திட்டமிட்டு உருவாக்கியதாக நம்பப்படுகிறது.

பரமட்டா பகுதியில் கைதாகியுள்ள குறித்த நபர் மீது போலி ஆவணத்தை உருவாக்கி நீதித்துறையை திசை திருப்ப முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதேவேளை இன்றே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment