புதிய சிக்கலொன்றை உருவாக்க மைத்ரி முஸ்தீபு: நளின் குற்றச்சாட்டு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 4 December 2018

புதிய சிக்கலொன்றை உருவாக்க மைத்ரி முஸ்தீபு: நளின் குற்றச்சாட்டு!


மைத்ரியின் அண்மைய பிரதமர் மற்றும் அமைச்சு நியமனங்களுக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த தரப்பிலிருந்து புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க அவர் முயற்சிப்பதாக தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் நளின் பண்டார.ஏலவே 122 பேர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருக்கின்ற நிலையில் கடந்த ஒரு மாதமாக மஹிந்த ராஜபக்சவால் பெரும்பான்மையைப் பெற முடியாது போனதுடன் நீதிமன்றமும் அரசாக இயங்குவதற்கு மஹிந்த அணிக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், புதிய  சர்ச்சையொன்று உருவாகும் சாத்தியம் குறித்து தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் நளின் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment