வெளிநாடுகள் 'மைத்ரியை' அன்றி 'நல்லாட்சியையே' அங்கீகரித்தன: மங்கள - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 December 2018

வெளிநாடுகள் 'மைத்ரியை' அன்றி 'நல்லாட்சியையே' அங்கீகரித்தன: மங்கள


மஹிந்த ராஜபக்சவின் பாரிய கடன் மற்றும் முறிந்து போன ராஜதந்திர சுமைகளுடன் கூட்டணி அரசு நாட்டைப் பொறுப்பேற்றிருந்ததாகவும் அதன் பின்னணியில் சர்வதேச அரங்கில் மைத்ரிபால சிறிசேனவுக்கு கிடைத்த வரவேற்பும் கௌரவமும் அவருக்கான தனி நபர் மரியாதையன்றி இலங்கையில் மலர்ந்த நல்லாட்சிக்கான அங்கீகாரம் என தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.ஜி7 மாநாட்டுக்குச் சென்றிருந்த வேளையில் மைத்ரிக்கு கிடைத்த கௌரவமான வரவேற்பை அவர் தனக்கு தனிப்பட்ட ரீதியாகக் கிடைத்ததாகக் கருதியிருந்தால் அது தவறென தனது இன்றைய நாடாளுமன்ற உரையின் போது தெரிவித்த மங்கள, தமது (கட்சி) வாக்குகளாலேயே மைத்ரி ஜனாதிபதியானதானதை மறக்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தார்.

எனினும், தன்னை நம்பியே மக்கள் வாக்களித்ததாகவும் தான் மக்கள் ஆணையையே நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகவும் மைத்ரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment